266. அருள்மிகு மகாதேவர் கோயில்
இறைவன் மகாதேவர், அஞ்சைக்களத்தப்பர்
இறைவி உமையம்மை
தீர்த்தம் சிவகங்கை
தல விருட்சம் சரக்கொன்றை
பதிகம் சுந்தரர்
தல இருப்பிடம் திருஅஞ்சைக்களம், கேரளா
வழிகாட்டி தற்போது 'திருவஞ்சிக்குளம் மகாதேவர் கோயில்' என்று அழைக்கப்படுகிறது. திருச்சூரிலிருந்து இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ளது. கொடுங்களூரில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. எர்ணாகுளத்தில் இருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ளது.
தலச்சிறப்பு

பரசுராமர் தனது தாயைக் கொன்ற பாவத்திற்கு அஞ்சி, அது நீங்குவதற்கு இத்தலத்திற்கு வந்து வழிபட்டதால் 'திருஅஞ்சைக்களம்' என்று இத்தலம் அழைக்கப்படுகிறது.

Thiruvanchikulam Moolavarமூலவர் 'மகாதேவர்', 'அஞ்சைக்களத்தப்பர்' என்னும் திருநாமங்களுடனும், அம்பாள் 'உமையம்மை' என்னும் திருநாமத்துடனும் சிறிய உற்சவ மூர்த்தி வடிவில் காட்சி அளிக்கின்றனர்.

பிரகாரத்தில் சுந்தரர், சேரமான் பெருமாள் ஆகியோரின் உற்சவ மூர்த்திகள் உள்ளன.

அறுபத்து மூன்று நாயன்மார்களுள் சேரமான் பெருமாள் நாயனார் இத்தலத்திற்கு அருகிலுள்ள கொடுங்காளூர் என்னும் ஊரில் பிறந்து, ஆட்சி புரிந்து, சிவத்தொண்டு செய்து முக்தி பெற்ற தலம்.

இத்தலத்திற்கு வந்த சுந்தரர், இவ்வுலக வாழ்வை விடுத்து கயிலாயம் செல்ல வேண்டி பதிகம், சிவபெருமான் வெள்ளை யானையை அனுப்பி அவரை அழைத்துக் கொண்டார். இதை அறிந்த சேரமான் பெருமாள் நாயனார் தமது குதிரையில் ஏறி அதன் காதில் பஞ்சாட்சர மந்திரம் ஓத, சுந்தரருக்கு முன் கயிலாயம் அடைந்தார். ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று இந்நிகழ்வு பெரிய திருவிழாவாகத் தமிழ் மக்களால் அங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

வைணவ ஆழ்வார்கள் பன்னிருவருள் ஒருவரான குலசேகர ஆழ்வாரின் அவதாரத் தலம் இது.

சுந்தரர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com